ஈழத் தமிழர் மறுவாழ்வு-இந்தியா உடனடியாக தலையிட திமுக கோரிக்கை

முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் உடன் இருந்தார்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் மிகுந்த அவல நிலையில் உள்ளனர். அவர்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தாமததித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை இந்தியா தலையிட்டு செய்ய வேண்டும் என்று கருணாநிதி விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தேவையானதை செய்யவும் இலங்கை அரசை வற்புறுத்துவதாக உறுதியளித்தார்.
சமீபத்தில்தான் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து விவரித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்குப் பிரதமர் அனுப்பிய பதிலில், தமிழர் நலனில் மத்திய அரசு முழு அக்கறையுடன் உள்ளது. தமிழர்களுக்குத் தேவையான நிவாரணம் கிடைக்கச் செய்வதில் உறுதியாக உள்ளது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை நேரடியாக பிரதமரை சந்தித்து திமுக தனது கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications