30 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமல் இயங்கி வந்த 30 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தி்ல இருக்கும் பல பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ அமைப்பிடம் முறையான அனுமதி பெறாமல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சென்னையில் மூன்று, நாகர்கோவிலில் ஒன்று என நான்கு பொறியியல் கல்லூரிகளில் சோதனையி்ட்டு, முறைகேட்டை வெளி கொண்டு வந்தனர்.
இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகமும் அதிரடி சோதனை நடத்தியது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சுமார் 30 பொறியியல் கல்லூரிகள் உள்கட்டமைப்பு குறைபாடு மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வருவது போன்றவை தெரிய வந்துள்ளது.
இந்த கல்லூரிகள் 50 முதல் 65 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளன. அடுத்த மாதம் 1ம் தேதி நடக்கும் பல்கலைக்கழக ஆட்சிமன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்.
மேலும், இது குறித்து விரிவான விளக்கம் கேட்டு அந்த கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதை தொடர்ந்து அவர்களுக்கு ஒரு மாதகால அவகாசம் கொடுக்கப்படும்.
இந்த அவகாச காலத்தை பயன்படுத்தி கொண்டு கல்லூரிகள் தங்களது குறைகளை நீக்கி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
அவகாச காலத்துக்குள் குறைபாடுகள் களையப்படவில்லை என்றால் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டுள்ளோம் என்றார்.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications