'ராஜவைத்தியர்' மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவிதாங்கூர் ராஜவைத்திய சாலை, டாக்டர் விஜயக்குமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மான் கறி சிகிச்சை உள்பட பல்வேறு மோசடிகளைச் செய்து பல கோடிகளை சுருட்டியதாக ராஜ வைத்தியர் விஜயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 21 வழக்குகள் பதிவாகியுள்ளனர். இதில் 18 வழக்குகளில் ஜாமீன் கோரியும், சில வழக்குகளில் முன் ஜாமீன் கோரியும் சென்னை செஷன்ஸ் கோர்ட்டை அணுகினார் விஜயக்குமார்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, இன்னும் எந்த வழக்கிலும் விசாரணை முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மனுக்களையும் நீதிபதி தேவதாஸ் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
இந் நிலையில் விஜய்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications