முல்லைபெரியாறு புதிய அணை: ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் - வைகோ
சென்னை: முல்லைபெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் நிலையை உருவாக்கும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை..
கடந்த 2006ல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிமுக அரசின் முயற்சியால் உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. ஆனால், அதை கேரள அரசு உதாசீனம் செய்துவிட்டது.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் டெல்லிக்கு திரும்பத் திரும்ப சென்று அணை உடையும் ஆபத்து இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை தந்து அணையின் நிர்வாகத்தை கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதையடுத்து பிரதமர் கேரள அரசின் கோரிக்கையை ஆய்வு செய்யுமாறு மத்திய நீர்வளத் துறை மற்றும் சட்ட அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது கண்டனத்துக்குரிய தவறான நடவடிக்கையாகும்.
இந்நிலையில் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்து, பூர்வாங்க வேலைகளையும் தொடங்கி விட்டது. இதனால் தென்தமிழ்நாட்டில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதியை இழப்பதுடன் குடிநீருக்கும் வழியின்றி போகும் விபரீதம் உருவாகும்.
புதிய அணை கட்டுவது குறித்து கேரள அரசு ஆய்வு செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. இப்படி ஆய்வு செய்ய அனுமதித்ததே தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையாகும்.
தமிழகத்துக்கு கேரளம் அநீதி இழைப்பதை மத்திய அரசு அனுமதித்து ஊக்குவிக்குமானால், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே உலைவைக்கின்ற நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன் என்றார் வைகோ.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications