முல்லை பெரியாறு: புதிய அணை கட்டும் வரை உண்ணாவிரதம் - உம்மன்சான்டி
உப்புத்துறை: முல்லைபெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்டும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடரப் போவதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சான்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பகுதியில் முல்லைபெரியாறு சமிரா சமாதி என்ற அமைப்பினர் புதிய அணை கட்ட வேண்டி தொடர் உண்ணாவிரதம இருந்து வருகின்றனர்.
அவர்கள் நேற்று உண்ணாவிரத்தின் 1000வது நாளை விழா நடத்தினர். இதில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சான்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மேலும், சமீபத்தில் சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புதிய அணை கட்ட நில அளவை பணிகளை துவக்க அனுமதி கொடுத்ததை கொண்டாடவும் அவர்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சியில் உம்மன் சான்டி பேசுகையில்,
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதுதான் நிரந்தர தீர்வு. தற்போது அணை அருகே சர்வே பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இருந்த போதிலும் அணை கட்டும் பணி துவங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து நடத்த வேண்டும.
உறுதியான எண்ணத்துடன் போராடி வரும் மக்களின் இந்த போராட்டம் பாராட்டுக்குரியது. அவர்கள் காந்திய வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு கேரள மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக முல்லைபெரியாறு அணையின் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை கவனிக்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications