ஹரியானா சட்டசபை தேர்தலில் யுவராஜ் தந்தை போட்டி
பஞ்சகுலா: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஹரியானா சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய லோக் தள கட்சி சார்பில் பஞ்சகுலா தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜகவுடன் கைகோர்த்துள்ள இந்திய தேசிய லோக் தளம் கட்சி நேற்று 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
இதில் யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பஞ்சகுலா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
யுவராஜ் பிரசாரம செய்வார்...
இது குறித்து யோக்ராஜ் கூறுகையில்,
எனக்கு சௌத்ரி தேவி லாலின் கொள்கைகளில் அதிக பற்று உண்டு. கட்சி தலைமை எடுத்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். என்னை விரும்பும் யாரும் எனக்கு பிரசாரம் செய்யலாம். அதற்கு யாருக்கும் தடை விதிக்கப்படாது.
நான் தேர்தலில் போட்டியிடுவதற்காக யுவராஜ் கிரிக்கெட்டை விட்டுவிட வேண்டும் என நான் கூற மாட்டேன். அவர் தற்போது கிரிக்கெட் விளையாட தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார்.
அவர் எல்லாவற்றையும் விட தந்தை தான் முக்கியம் என நினைத்தால் நிச்சயம் எனக்காக பிரசாரம் செய்ய வருவார் என்றார்.
யுவராஜின் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாயாருடன் யுவராஜ் சிங் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications