சிதம்பரம் கோவிலில் இரட்டை சாவி முறை - அற நிலையத்துறை ஆணையர் தகவல்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சாவி, தீட்சிதர்கள் மற்றும் அற நிலையத் துறையிடம் ஆகிய இரு தரப்பினரிடம் இருக்கும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத் கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனால், கோவில் நிர்வாகம் முழுமையாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத் ஆய்வு செய்தார்.
அப்போது இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியாதவது,
உயர்நீதி மன்ற தீர்ப்பை அடுத்து, நடராஜர் கோவில் அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
இரண்டாம் நிலையில் உள்ள இக்கோவிலை முதல் நிலைக்கு மாற்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்காக 13 வது நிதிக்குழுவில் 38 கோடி ரூபாய் கேட்டுள்ளோம்.
பொதுமக்கள், பக்தர்களின் கோரிக்கை ஏற்று கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பதி, பழநி கோவில்கள் போன்று நடராஜர் கோவில் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாக அர்ச்சனை டிக்கெட், அபிஷேக கட்டணம், பிரசாதக் கடைகள் நடைமுறைப் படுத்தப்படும். கோவிலின் உள்ளே முக்கிய இடங்களில் உண்டியல் வைக்கப்படும்.
கோவிலுக்கு 2,594 ஏக்கர் நஞ்சை, 895 ஏக்கர் புஞ்சை என மொத்தம் 3,489 ஏக்கர் நிலம் உள்ளது. 467 ஏக்கர் நேரடி கட்டுப்பாட்டிலும், மீதமுள்ளவை குத்தகையிலும் உள்ளன.
கோவில் கட்டளைகள் குறித்தும், அதன் மூலம் வரும் வருவாய் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை ஆணையர் அனுமதியின்றி, கோவில் சொத்துக்களை விற்கவோ, குத்தகை விடவோ முடியாது.
கோவிலில் இரட்டை சாவி முறை அமல்படுத்தப்படும். அதன்படி, கோவில் சாவிகள் அனைத்தும் இரண்டாக போடப்பட்டு ஒன்று தீட்சிதர் செயலரிடமும், மற்றொன்று அறநிலையத்துறை செயல் அலுவலரிடமும் இருக்கும்.
அதே போன்று கோவில் பெயரிலும், தீட்சித்தர்கள் இருவர் பெயரிலும் ஜாயின்ட் கணக்கு வைக்கப்படும். பூஜை முறையில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை. வழக்கம் போல் நடைபெறும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications