பெண் விடுதலைப் புலி வருகை என தகவல்-கேரளாவில் பீதி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுடன் பெண் விடுதலைப் புலி வருவதாக மர்ம போன் வந்ததால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-10 கோச்சில் ஒரு பெண் விடுதலைப் புலி இருக்கிறார். அவரது பையில் வெடிகுண்டு இருக்கிறது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் போலீசார் பரபரப்படைந்தனர். உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவி்த்தனர். ரயில் எர்ணாகுளம் ஸ்டேஷனுக்கு வந்ததும் அதில் ஏறி தீவிர சோதனை போட்டனர்.

போன் நபர் கூறிய அதே அடையாளத்தில் ஒரு பெண் இருந்தார். அவரிடம் பை ஏதும் இல்லை. போலீசார் விசாரித்தனர். அவர் சைகையில் பதிலளித்தார்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் வாய் பேச முடியாதவர் என தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. போன் செய்தவர் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+