கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
நாமக்கல்: குமாரபாளையத்தில் கூலி அதிகரிக்க கோரி, விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 4,000 விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் குளத்துக்காட்டில் 200 -க்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. அதில் பணியாற்றும் கூலி தொழிலாளர்கள் 20 நாட்களாக கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமாரபாளையத்தை சுற்றியுள்ள சின்னப்பநாயக்கன் பாளையம், காவேரி நகர், ஓலப்பாளையம், கத்தேரி போன்ற பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கூலி உயர்வு கேட்டு நேற்று முன்தினம் முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 4000 விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனையடுத்து, விசைத்தறி தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டம் அதன் மாநில தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
வாழ்க்கை நடத்த தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்தமுடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு விசைத்தறி தொழிலாளர் தள்ளப்படுள்ளனர்.
இதனால், தான் கூலி உயர்வு கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப் பிரச்னையில் அரசு தலையிட்டு, விசைத்தறி உரிமையாளர் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் ஆகியோரிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தற்போது வேஷ்டிக்கு வழங்கப்படும் கூலியான 3.80 ரூபாயில் இருந்து 4.10 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அதே போன்று , நூல் ஓட்டும் பெண்களுக்கு ஐந்து கிலோ எடைக் கொண்ட கட்டுக்கு 10 ரூபாய் உயர்த்தி 40 ரூபாயும், தார் மற்றும் பாவு ஓட்டுபவர்களுக்கு ரகங்களுக்கு ஏற்ப கூலி உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications