ஜாமீனில் வெளிவந்தவர் துப்பாக்கியுடன் கைது
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி வந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வேறு வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பேபி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மர்ம நபர் ஒரு சுற்றி வருவதை பார்த்தனர்.
அவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 9எம்எம் ரக கைத்துப்பாக்கியும், 14 தோட்டாக்களும் இருந்ததை கண்டிபிடித்தனர்.
அதை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் சுந்தரராஜன்(27) என்பதும், அவர் டான்சி நகரில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
அவர் ஏற்கனவை கோயம்பேடு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், போலீஸார் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அவர் எதற்காக துப்பாக்கி வாங்கினார்? வேறு எதாவது கொலை முயற்சியில் ஈடுபட இருக்கிறாரா என விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளிகள் 13 பேரையும் தேடி வருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications