ஈரான், வட கொரியாவுக்கு அணு ஆயுதம்-ஏ.கியூ.கான் கடிதம் அம்பலம்
இஸ்லாமாபாத்: ஈரான், வட கொரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை பாகிஸ்தான் அரசின் உத்தரவின் பேரில் தான் வழங்கியதாக அந்நாட்டு அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் தற்போது வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் அணு ஆராய்ச்சின் தந்தை என்றழைக்கப்படும் அப்துல் காதிர் கான் கடந்த 2003ம் ஆண்டு அணு ஆயுத தொழில்நுட்பங்களை ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 74 வயதான அவரை நீதிமன்றம் விடுவித்துவிட்ட போதிலும், அரசு வெளியில் விடவில்லை.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி மனித உரிமை தினத்தன்று, ஏகியூ கான் நெதர்லாந்தை சேர்ந்த தனது மனைவி ஹென்னிக்கு எழுதிய கடிதம் ஒன்றை தற்போது அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் வெளியி்ட்டுள்ளார்.
இந்த கடிதம் தற்போது தான் முதன் முதலாக வெளியிடப்படுகிறது என்றும், அவர் எழுதிய கடிதத்தின் ஒரு நகல் எனக்கு கடந்த 2007ம் ஆண்டு கிடைத்ததாகவும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
ஏகியூ கான் கைப்பட எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் பல இடங்களிலும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இருக்கும் அணு ஆயுத உறவு பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதே போல் ஈரான், வட கொரியா குறித்தும் கூறப்பட்டுள்ளது. லிபியாவின் பெயரும் அடிக்கடி இடம்பெற்றுள்ளது.
அதில்,
பெனாசிர் பூட்டோவின் ஆசிர்வாதத்தாலும், ஜெனரல் இம்தியாஸ் கேட்டு கொண்டதாலும் ஈரானுக்கு சில தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டது. என்னிடம் யாருக்கும வழங்க வேண்டும், அவர்களின் பெயர், முகவரியும் ஆகியவையும் கொடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவுக்கு வரைபடமும், சில எந்திரங்களும் கொடுத்ததற்காக ஒரு தளபதிக்கு ரூ. 15 கோடி வாங்கி கொடுத்தேன். பாகிஸ்தானுக்கு முதன் முதலாக ஆணு ஆயுத உதவி அளித்த நாடு சீனா தான். 1982ம் ஆண்டு சீனா இரண்டு அணு குண்டு தயாரிக்க தேவையானவற்றை அளித்தது.
அதில் சுமார் 50 கிலோ செரியூட்டப்பட்ட யுரேனியங்கள், 10 டன் இயற்கையான யுரேனியம் புளூரைடு மற்றும் 5 டன் யுரேனியம் புளூரைடு (3 சதவீதம்) ஆகியவற்றை வழங்கியது.
சீனாவின் ஜியான் பகுதியில் ஹான்சாங் பகுதியில் ஒரு சென்ட்ரிபியூச் தொழிற்சாலையை நிறுவினோம்.
முதலில் இந்த திட்டத்துக்கு என்னை நன்றாக பயன்படுத்தி கொண்ட பாகிஸ்தான் அரசு பின்னர் என்னை கைகழுவி விட்டது என எழுதியுள்ளார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications