தீவிரவாத மிரட்டல்களை சந்திக்க தயார்-ப.சிதம்பரம்
டெல்லி: எத்தகைய தீவிரவாத மிரட்டல்களையும் சந்திக்க பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கின்றனர். தீவரவாதிகளின் சவால்களை சந்தித்து அவற்றை முறியடிக்க அவர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி விரைவில் வரவுள்ளது. அதேபோல ஆயுத பூஜையும் வரவுள்ளது. இந்த சமயத்தில், கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இன்று டெல்லியில் நடந்த 22 புதிய காவல் நிலையங்கள் திறப்பின்போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், நமது ஆயத்த நிலையை பல மடங்கு நாம் அதிகரித்துள்ளோம். எந்தவிதமான தீவிரவாத தாக்குதலையும், மிரட்டலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
ஒரு வேளை தீவிரவாத தாக்குதல் நடந்தாலோ அல்லது மிரட்டல் விடுக்கப்பட்டாலோ, நமது பதிலடி விரைவாகவும், இறுதியானதாகவும் இருக்கும்.
நாட்டுக்கு விடப்படும் எத்தகைய மிரட்டலையும் சமாளிக்கத் தேவையான ஆயத்த நிலையில் நமது பாதுகாப்புப் படையினரும், உளவுத்துறையினரும் உள்ளனர்.
தற்போது நாட்டுக்கு எந்தவித அபாயமும் இல்லை. எல்லைக்கு அப்பாலிருந்து நமக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் நமக்கு தெளிவாகவே தெரியும். நமது உளவுத்துறை மிகச் சிறப்பாக உள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications