ஓசன்சாட்-2 - பி.எஸ்.எல்.வி. மூலம் நாளை ஏவப்படுகிறது

கடலில் மீன்வளத்தைக் கண்டறிவது, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் செலுத்தப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நாளை ஓசன்சாட்-2 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
970 கிலோ எடையுடன் கூடிய ஓசன்சாட் செயற்கைக் கோளுடன், ஆறு சிறிய ரக செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தவுள்ளது பிஎஸ்எல்வி.
இந்த ஆறு சிறிய செயற்கைக் கோள்களில் நான்கு ஜெர்மனியைச் சேர்ந்தவை. மற்ற இரண்டில் ஒன்று சுவிட்சர்லாந்து மற்றும் இன்னொன்று துருக்கியைச் சேர்ந்ததாகும்.
பிஎஸ்எல்வியை செலுத்துவதற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தற்போது அது இயல்பான நிலையில் இருப்பதாக இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் எஸ்.சதீஷ் தெரிவித்தார்.
பி.எஸ்.எல்.வி மூலம் இதுவரை 15 முறை செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. நாளை செலுத்தப்படவுள்ளது பி.எஸ்.எல்.வி- சி14 ரகமாகும்.
நாளை முற்பகல் 11 மணிக்கு பி.எஸ்.எல்.வி. செலுத்தப்படவுள்ளது.
துணை குடியரசுத் தலைவர் பார்க்கிறார்...
பி.எஸ்.எல்.ஏ. ஏவப்படுவதை துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி நாளை நேரில் பார்வையிடுகிறார். இதற்காக இன்று மாலை 4.50 மணிக்கு அவர் சென்னை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அவர் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார்.
நாளை மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு 4.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து 4.50 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications