இலங்கையால் கடத்தப்பட்ட 21 மீனவர்கள் இன்று விடுதலை
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களும் இன்று விடுவிக்கப்படுகிறார்கள்.
கடந்த 16-ந் தேதி கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். பின்னர் 21 மீனவர்களை பிடித்துச் சென்று விட்டனர்.
21 மீனவர்களையும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
இவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கால்வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீனவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. அதன் பேரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் பாம்பனில் உள்ள நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் நேற்று மன்னார் கோர்ட் பதிவாளர் அபுபக்கருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அப்புக்கர் கூறுகையில், அனுராதபுரம் சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்களை வியாழக்கிழமை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி 21 மீனவர்களும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், அதன்பின் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அருளானந்தம் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications