லஞ்சம்-வீடியோ தடுப்பு பிரிவு எஸ்ஐ மீது வழக்கு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வீடியோ தடுப்பு பிரிவு எஸ்ஐயை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் வீடியோ தடுப்பு பிரிவு போலீஸார் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி மனோகர குமார், இன்ஸ்பெக்டர் எஸ்கால், மாவட்ட ஆய்வு குழு தலைவர் நாராயணன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு வீடியோ தடுப்பு பிரிவுக்கு அலுவலகத்துக்கு வந்தது.
இவர்கள் வருவதை எப்படியோ தெரிந்து கொண்ட வீடியோ தடுப்பு பிரிவு எஸ்ஐ அன்பழகன் தலைமையிலான போலீசார் ஜீப்பில் வேகமாக கிளம்பி சென்றனர்.
அவர்கள் தப்பிக்க முயல்வதை பார்த்த லஞ்ச ஒழிப்பு படையினர் அவர்களை விடாமல் துரத்தினர். சிவந்திப்பட்டி சாலையில் அவர்களது ஜீப்பை வழிமறி்த்து, சோதனையிட்டனர்.
அப்போது ஜீப்பில் கணக்கில் வராத ரூ. 2,500 மற்றும் 919 சிடிக்களை கைப்பற்றினர். அவர்கள் எஸ்ஐ அன்பழகன், ஏட்டு கணபதி உள்ளிட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications