உதவி பெற வந்த பெண்ணிடம் விஏஓ சில்மிஷம்!
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் பத்தமடையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்காக புகைப்படம் எடுக்க வந்த பெண்களிடம் விஏஓ தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்கும் பணி பத்தமடை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்காக பெண்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு புகைப்படம் எடுக்க திரண்டனர்.
அப்போது அங்கிருந்த விஏஓ ஒருவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதை புறக்கணித்தனர். விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அந்த விஏஓ மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
விஏஓக்கு பளார்-ஊராட்சி து.தலைவர் கைது:
இதற்கிடேயே இரண்டு குடும்ப அட்டை வைத்திருந்ததை தட்டிகேட்ட விஏஓவை பளார் என அறைந்த திருவாடனை ஊராட்சி துணை தலைவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாண்டுகுடி விஏஓவாக பணியாற்றி வருபவர் பாலகுரு.
இவர் ரேஷன் அட்டை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஊராட்சி துணை தலைவர் வேலவன் பெயர் இரண்டு ரேஷன் கார்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.
இதனால் ஒரு அட்டையிலிருந்த அவரது பெயரை விஏஓ பாலகுரு நீக்கினார்.
இதனையறிந்த வேலவன், விஏஓவுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வேலவன், விஏஓவை கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார்.
இந்த சம்பவத்தால் மிகவும் மன வேதனையடைந்த விஏஓ, தொண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அரசு ஊழியரை கை நீட்டி அடித்த காரணத்துக்காக எஸ்ஐ நாகராஜ் ஊராட்சி துணை தலைவர் வேலவனை கைது செய்தார்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications