ஜெ. புலிகள் வரலாறு தெரியாதவர்-நெடுமாறன்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஜெயலலிதா. இந்த விஷயத்தில் சிங்கள அரசு, அதன் கைக்கூலிகள் மற்றும் முதல்வர் கருணாநிதியைப் போலவே அவரும் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
இதுகுறித்து நெடுமாறன் தெரிவித்துள்ளதாவது:
ஈழத்தமிழர் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்கவேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையை வரவேற்கிறேன். ஆனால் அதில் தேவையற்ற வகையில் விடுதலைப் புலிகளைக் குறை கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களைக் கொலை செய்து வருகிற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் என்றைக்கு மாறியதோ அன்றிலிருந்து அந்த இயக்கத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபாகரன் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த அளவுக்கு உதவி செய்தார் என்பதை நாடறியும். ஜெயலலிதாவின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமானால் எம்.ஜி.ஆர். ஒரு போதும் உதவியிருக்கமாட்டார் என்பதை உணரவேண்டும்.
ஈழத் தமிழர்கள் உட்பட தமிழர்களின் நாடித்துடிப்பை நன்கறிந்தவர் எம்.ஜி.ஆர். அவரால் இறுதிவரை ஆதரிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் மீது அவதூறு கூறுவது அவருக்கு இழைக்கப்படும் மன்னிக்கமுடியாத தவறாகும்.
ஈழ மக்களின் ஒரே பாதுகாவலனாகவும் அவர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற தேசிய விடுதலை இயக்கமாகவும் புலிகள் இயக்கம் மட்டுமே திகழ்ந்து வருகிறது. அதனால்தான் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளானபோதிலும் ஈழத் தமிழர்கள் அந்த இயக்கத்தின் பின்னால் நிற்கிறார்கள்.
ஜெயலலிதா கூறுவதைப்போல அந்த இயக்கம் இருக்குமானால் ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அந்த இயக்கத்திற்கு கிடைத்திருக்காது. வரலாறு தெரியாமலும் சிங்கள அரசின் பொய்ப்பிரச்சாரத்தையே எதிரொலிப்பதும் மிகவும் கண்டனத்துக்குரியது.
விடுதலைப்புலிகளின் இயக்கம் ஈழமக்களின் தேசிய விடுதலை இயக்கமாகும். அதை கொச்சைப்படுத்த முயல்பவர் யாராக இருந்தாலும் அவர்களை ஈழத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications