ஃபிளேம் பைக்குக்கு சான்றிதழ் - வாங்க டிவிஎஸ் தீவிரம்
Subscribe to Oneindia Tamil

இரட்டை ஸ்பார்க் பிளக்குகளைக் கொண்ட டிவிஎஸ் பிளேம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிவிஎஸ் பிளேம் தொடர்பான காப்புரிமை தொடர்பாக டிவிஎஸ் நிறுவனத்திற்கும், பஜாஜ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், டிவிஎஸ் பிளேம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து விற்பனைக்கு விரைவில் பிளேம் பைக்குகளை விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சட்டப்படி தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பெறவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications