முல்லை பெரியாறு கோப்பில் தவறு: செய்தது யார்?

புதிய அணை கட்ட வனப் பகுதிகளை கையகப்படுத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கட்டாயம்.
இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் மத்திய அரசு விளக்கம் கோரும். மேலும் இத் திட்டம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதையும் மத்திய அரசு கேட்கும்.
முல்லைப் பெரியாறு விஷயத்திலும் இது போன்ற கேள்வியை மததிய அரசு கேட்டது. ஆனால், அதற்கு மத்திய வனத்துறை அதிகாரிகள் அளித்த பதிலில் வழக்குகள் ஏதும் என்று குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்தே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தவறான குறிப்பு வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் டெல்லியில் உள்ள பலம் வாய்ந்த கேரள 'லாபி' இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எதையும் நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாக முதுகில் குத்துவதில் இந்த 'லாபிக்கு' நிகர் ஏதுமில்லை.
இதில் இன்னொரு விவகாரமும் உள்ளது. கேரளத்துக்கு மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுத்துப்பூர்வமாக அனுமதி தரவில்லை. தொலைபேசி வாயிலாகத்தான் அனுமதி தந்ததாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
இதனால் கேரள லாபியின் கைவரிசை இருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்படுகிறு.
சமீபத்தில் தேசிய வனவிலங்கு வாரியம் நடத்திய கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழக்கு எதுவும் இல்லை என்ற பொய்யான தகவல் இடம்பெற்றிருப்பதை தமிழக அதிகாரிகள் தான் கண்டுபிடித்து முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்தே ஜெய்ராம் ரமேஷுக்கு முதல்வர் கடுமையான கடிதம் எழுதியுள்ளார்.
இந் நிலையில் தவறான தகவல்கள் அடங்கியுள்ள தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பையும் வெளியிட மாட்டோம் என்றும் தமிழகத்திடம் ஜெயராம் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
நீர் விஷயத்தில் கர்நாடகமாவது தமிழகத்துடன் நேரடியாக மோதல் போக்கை கையாள்கிறது. ஆனால், உணவக்கு தமிழகத்தை சார்ந்து வாழும் கேரளம் நேரடியாக அல்லாமல் முதுகில் குத்தும் போக்கை கையாண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications