காங். தலைவர்கள் படம், கட்சி கொடி எரிப்பு-பெண் கைது
திருச்சி: திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படம் மற்றும் கட்சிக் கொடியை தீவைத்து கொளுத்திய பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் 44வது வார்டுக்கு வரும் 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் சார்பில் 6 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் ஹேமா என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த சாருபாலா தொண்டைமானின் ஆதரவாளரான கல்யாணி என்பவர், தன் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படம் மற்றும் கட்சிக்கொடி, கட்சி கரையுடன் கூடிய சேலை ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தினார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காங்கிரஸ் கட்சி கொடி தலைவர்கள் படத்தை எரித்த பெண் நிர்வாகியை கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications