அடுக்குமாடி குடியிருப்பில் தாய்-மகன் கொலை
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 39 வயது பெண்ணும் அவரது 12 வயது மகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி 49வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராமசுப்பிரமணியம். பெங்களூரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் இவர் வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்வார்.
அவருடைய மனைவி பெயர் அனந்தலட்சுமி (39), பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மகள் ஷோபனா (19), 8ம் வகுப்பு படிக்கும் மகன் சூரஜ் (12) ஆகியோர் இந்த வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று ஷோபனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
தாயாரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஷோபனா தனது தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். அப்போதும் வீடு பூட்டியிருந்தது.
இரவு 11 மணி வரை தாயும் தம்பியும் வராததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தந்தார். அவர்கள் போலீசாருக்கு தகவல் தரவே அசோக்நகர் போலீசார் விரைந்து வந்தனர்.
போலீசார் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அனந்தலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மற்றொரு அறையில் சூரஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
இருவரது கழுத்தும் வெட்டப்பட்டிருந்தன. அருகிலேயே ஒரு கத்திரிக்கோலும் கிடந்தது. கத்திரிக்கோலால் அவர்கள் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
அனந்தலட்சுமி, சூரஜ் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். அனந்தலட்சுமியின் கணவர் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
கொலை நடந்த இடத்தை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று காலை பார்வையிட்டார். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனந்தலட்சுமி கழுத்தில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் அப்படியே உள்ளன.
ஆகவே இது கொள்ளையாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது. இந்தக் குடும்பத்துக்கு தெரிந்த யாரோ தான் இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகள் புதுப் பூட்டை வாங்கி பூட்டிவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications