முதல்வருக்கு 2,000 போஸ்ட் கார்டுகள்!
மதுரை: இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 2 ஆயிரம் போஸ்ட் கார்டு அனுப்பி வைத்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தலைமை ஆசிரியர்கள் சங்கம், தமிழாசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கழகம் ஆகியவை இணைந்து இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் பணி உயர்வில் சதவீதம் குறைக்கப்பட்டதை கண்டித்தும், பள்ளி துணை ஆய்வாளர் பணிகளை ரத்து செய்தது, தொகுப்பூதிய பணிக்காலத்தை முறைப்படுத்துதல், 6 முதல் 10 ம் வகுப்பு வரை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உயர்த்துதல் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து இந்த சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று முதல்வர் கருணாநிதிக்கு இரண்டாயிரம் போஸ்ட்கார்டுகளை அனுப்பி வைத்தனர்.
இந்த கூட்டமைப்பின் தொடர்பாளர் மகேந்திரன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஜெயக்கொடி, தலைமை ஆசிரியர் சங்க புரவலர் ராஜூ, ஆரோக்கியசாமி முத்தையா, தமிழாசிரியர் கழக முனியாண்டி, ரேணுகா, உடற்பயிற்சி ஆசிரியர்கள் நவமணி, இடைநிலை ஆசிரியர் மணிகண்டன் உட்பட பலர் இந்த நூதன பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications