அக். 6ம் தேதி பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
மதுரை: பீடித் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 ம் தேதி அன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ் நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ம. ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில், பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, இலை குறைவு மூலம் மறைமுக கூலி வெட்டு, குறைந்தபட்ச கூலி வழங்க மறுப்பு, பென்சன் குறைந்தபட்சம் ரூ.1000, வீடு கட்ட மானியம் ரூ.1லட்சம், கல்வி உதவித்தொகை, மருத் துவவசதி, சர்வீஸ் கார்டு வழங்குதல், பணிக்கொடை வழங்குதல், காண்ட்ராக்ட் முறை ரத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த பல வருடமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு, 18.2.2009 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி, தொழிலாளர் நல அமைச்சர் , தொழிலாளர் துறை செயலாளர், ஆணையர் மற்றும் பீடிக் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை, பீடிக் கம்பெனிகள் சட்டப்படியான உரிமைகளை வழங்க மறுத்து, சட்ட விரோதமான முறையில் பீடி உற்பத்தி செய்து வருகிறார்கள்.
இதனால், தமிழக அரசு, சட்டக் கூலி - சட்ட சலுகைகள் அமலாக்கத்தை கை விட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோரிக்கைகள் மீது தொழிலாளர் துறை தனி துணை ஆணையர் முன்பு, 7 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் ஒரு பீடிக் கம்பெனி முதலாளியும் கலந்து கொண்டதில்லை.
24.9.2009 அன்று நடந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. தொழிலாளர் துறை எடுக்கும் சட்டபூர்வ மான நடவடிக்கைகளை மதிக்காமலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறார்கள். பீடி முதலாளிகளின் இத்தகைய போக்கு கண்டனத்திற்குரியது.
எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications