கல்விக் கடன் கேட்பவர்கள் ஏழைகள், டாடா, பிர்லா இல்லை - எம்.எல்.ஏ பாய்ச்சல்
நெல்லை: வங்கிகளில் கல்வி கடன் கேட்பவர்கள் டாடா, பிர்லா இல்லை என வங்கியாளர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ அப்பாவு காட்டத்துடன் கூறினார்.
நெல்லை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
கடந்த ஆண்டு ராதாபுரத்தில் 567 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்படவில்லை.
ஐசிஐசிஐ, பாண்டியன் கிராம வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை கடன் வழங்க மறுக்கின்றன. கல்வி கடன் வழங்க எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது. எந்த ஆவணங்களையும் கேட்க கூடாது என என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் வங்கிகள் நாங்கள் அளிக்கும் பரிந்துரை கடிதங்களை கூட வங்கிகள் வாங்குவதில்லை. கடன் கேட்டு வரும் மாணவர்களிடம் வங்கிகள் உங்கள் பெற்றோரின் வருமான வரி அட்டையை கொண்டு வாருங்கள், ஒவ்வொரு ஆண்டும் பெற்ற மதிப்பெண் பட்டியல் கொண்டு வாருங்கள் என கெடுபிடி செய்கின்றன.
கல்வி கடன் கேட்பவர்கள் யாரும் டாடா, பிர்லாவுக்கு பிறக்கவில்லை. கல்வி கடன் கேட்பவர்களுக்கு குடும்ப அட்டையை தவிர வேறு எதுவும் சொத்துகள் இல்லை. தனி நபர்களுக்கு தொழில் தொடங்க கடன் கேட்டு நாங்கள் பரிந்துரை செய்யவில்லை.
ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமாக மாணவர்களை அலைக்கழிக்கும் பரிதாப நிலை உள்ளது என்றார்.
கூட்டத்தில் கலெக்டர் ஜெயராமன் பேசுகையில்,
நெல்லை மாவட்டத்தில் பாண்டியன் கிராம வங்கியின் 51 கிளைகள் உள்ளன. ஆனால் 80 சதவீதம் மதிப்பெண் இருந்தால்தான் கடன் கொடுக்க முடியும் என கூறுகிறீர்கள். அப்படியானால் எந்த வங்கியில் போய் அந்த மாணவர் கடன் பெறுவார்.
இதுபோன்று கல்வி கடன் மறுக்கப்பட்ட மாணவர்கள் அந்தந்த வங்களில் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள் சேவை கிளைகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு வரும் 10ம் தேதி கடன் ஆணை வழங்கப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications