தேமுதிக செயலர் கொலை-திமுக பிரமுகர் கைது
திருச்சி: திருச்சியில், தே.மு.தி.க கிளைச் செயலாளரை அடித்துக் கொலை செய்த தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சக்திவேல் (22) இவர் 56 வது வார்டு தே.மு.தி.க. கிளைச் செயலாளராக இருந்தார்.
இவர், அப் பகுதியில் கட்சிக் கொடிக் கம்பம் அமைத்திருந்தார். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க.பிரமுகர்கள் முருகன், முத்தையா, வடிவேல் , மாரிமுத்து ஆகியோருக்கு இடையே பிரச்சனை நிலவி வந்தது.
இந்த நிலையில், இந் கொடிக் கம்பம் தொர்பாக அவர்கள் சக்திவேலிடம் தகராறு செய்தனர். இதில் வாக்கு வாதம் முற்றி பிரச்சனை வெடித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.பிரமுகர்கள் முருகன், முத்தையா, வடிவேல், மாரிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சக்திவேலை தாக்கினர். காயமுற்ற சக்திவேல், போலீசில் புகார் அளித்தார்.
இந்தநிலையில், நேற்று சக்திவேலிடம், போலீசில் ஏன் புகார் செய்தாய் எனக் கூறி மீண்டும் அவரை அடித்து உதைத்துள்ளனர்.
இதில், சக்திவேலின் காலை பிடித்து கீழே இழுத்ததில், சக்திவேலுக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சக்திவேல், வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக போலீசார், முருகனை கைது செய்தனர். தப்பியோடிய முத்தையா, வடிவேல், மாரிமுத்துவை ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications