தொகுதிப் பக்கமே வராத தென்காசி எம்.பி இன்று அலுவலகம் திறக்கிறார்
தென்காசி: தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ ராமசாமி இன்று திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லிங்கம் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சுமார் 4 மாதம் வேகமாக ஓடிவிட்ட நிலையில் அவர் இதுவரை தொகுதி பக்கம் நன்றி சொல்ல கூட எட்டிபார்க்கவில்லை.
மேலும் அவர் தென்காசியில் மக்கள் தொடர்பு அலுவலகம், தென்காசி, கடையநல்லூர் சட்டசபை தொகுதி பணிகளின் போதும் அந்த பக்கம் வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில் தற்போது ஒரு வழியாக அவர் தென்காசிக்கு வர முடிவு செய்துள்ளார். வீட்டு வசதி வாரிய குடியிறுப்பில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது. இந்த விழாவுக்கு அவர் வருகிறார்.
இந்த அலுவலகத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை உறுப்பினர் ராமசாமி திறந்து வைக்கிறார். ஆனால், வாசுதேவநல்லூர் மதிமுக எம்எல்ஏ, ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் அதி்முக எம்எல்ஏ ஆகியோரின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications