நினைவு நாள்-வெங்கடேஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் ரகளை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் நடந்த ரத ஊர்வலத்தின்போது பண்ணையார் ஆதரவாளர்கள் பெரும் ரகளையில் இறங்கினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட பண்ணையாரின் நினை நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ரத ஊர்வலம் கிளம்பியது. அப்போது போலீஸாருடன், நாடார் பாதுகாப்பு பேரவையினர் மோதலில் இறங்கினர்.
இது பெரும் மோதலாக மாறி டிஎஸ்பி ஒருவரின் கார் உடைக்கப்பட்டது. மேலும், பஸ்கள் மீதும் கல்வீச்சு நடந்தது.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்து விரட்டினர்.












Click it and Unblock the Notifications