பால்கோ நிறுவன புகைக் கூண்டு நொறுங்கி 50 பேர் பலி - சீன என்ஜீனியர்கள் ஓட்டம்
டெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற இடத்தில் உள்ள பாரத் அலுமினியம் கம்பெனி (பால்கோ) நிறுவனத்தில் கட்டப்பட்டு வந்த பிரமாண்ட புகைக் கூண்டு நொறுங்கி விழுந்தது. இதில் சிக்கி 50 பேருக்கும் மேல் உயிரிழந்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 89 சீன என்ஜீனியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளூர் மக்கள் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தப்பி ஓடி விட்டனர்.
100 மீட்டர் உயரத்திலான அந்தப் புகைக் கூண்டு கட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை நொறுங்கி விழுந்தது. இதில் ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த என்ஜீனியர்கள், தொழிலாளர்கள் 89 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் பிடிக்க அரசு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இவர்கள் அனைவரும் சீனாவின் ஷான்டாங் எலக்ட்ரிகல் மின் கழகத்தின் சார்பில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.
600 மெகாவாட் திறனுடைய இரு மின் உலைகளை நிர்மானிக்கும் கான்டிராக்டை இந்த நிறுவனத்திடம் பால்கோ கொடுத்திருந்தது.
தப்பி ஓடியவர்களில் ஐந்து சீனப் பொறியாளர்கள், ராய்ப்பூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் கொல்கத்தாவுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்டனர்.
மேலும் பலர் பிலாஸ்பூர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications