தமிழர் முகாமில் துப்பாக்கிச் சூடு-5 பேர் காயம்
கொழும்பு: வவுனியாவில் உள்ள தமிழர்களுக்கான முகாமில் இலங்கை ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சமையலுக்கு விறகு சேகரிப்பதற்காக முகாமிலிருந்து வெளியே சென்றவர்கள் மீது ராணுவத்தினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
செப்டம்பர் 17ம் தேதி முதல் முகாம்களில் உள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை இலங்கை அரசு நிறுத்திவிட்டது.
உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் அரிசி, பருப்பை தமிழர்களே சமைத்து உண்டு வருகின்றனர்.
ஆனால், இதற்கான எரிபொருள் இல்லை. இதனால் சமைப்பதற்காக விறகுகளை பொறுக்க அவர்கள் ஒரு முகாமைவிட்டு இன்னொரு முகாமுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து இலங்கை ராணுவம் வழக்கம்போல் புதிய கதை விட்டுள்ளது. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது முகாமிலிருந்தவர்கள் கற்களை வீசித் தாக்கியதாகவும், அதைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ராணுவம் கூறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications