இப்போது குடியாத்தம் பிரச்சனை!..ஜெயலலிதா
சென்னை: குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்
குளுகுளு கொட நாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியாத்தம் நகராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதைப்போக்க நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. குப்பைகள் அகற்றப்படாத தன் காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று நோய்கள் பரவக் கூடிய அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நகர மன்றத் தலைவரை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்குக் கூட முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
அத்தியாவசியப் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,
வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை காலை குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications