ஸ்வைன்-நாகர்கோவிலில் 8 மாத கர்ப்பிணி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பலியானார்.
அந்த பெண்ணின் பெயர் நிஷா. நாகர்கோவிலுக்கு அருகே மருதக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்.
இவருக்கு சமீபத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையடுத்து தமிழகத்தில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் 300ஐ தாண்டியது...
இந்நிலையில் நேற்று டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் சண்டிகரை சேர்ந்த தலா ஒருவர் பலியானார்கள். இதையடுத்து இந்த நோய்க்கு இந்தியாவ முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications