சென்னையில் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு இன்று காலை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பல மணி நேரம் தேடியும் எதுவும் சிக்கவில்லை. அது புரளியாக இருக்கும் என தெரிகிறது.
சென்னையில் ஜனநெருக்கடி மிகுந்த தி.நகர் பகுதியில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் அந்த வங்கி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் வங்கி மேலாளருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் உங்களது வங்கியில் குண்டு வைத்துள்ளோம். அது விரைவில் வெடிக்கும் என கூறியுள்ளார்.
இதையடுத்து மிரண்டு போன வங்கி மேலாளர் உடனடியாக மாம்பலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸார் அது புரளியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தொலைபேசியில் தொடர்பு கொண்டது யார், அவர் எதற்காக இது அவ்வாறு தெரிவித்தார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications