பட்டாசு ஆலையில் விபத்து - வெடிகள் வெடித்ததில் மேலாளர் பலி
சிவகாசி: சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மேலாளர் பலியானார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான கிட்டங்கி உள்ளது. தீபாவளி நேரம் என்பதால் சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு லாரிகளில் அனுப்புவதற்காக இந்த கிட்டங்கியில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று மதியம் ஒரு சரக்கு ஆட்டோவில் பட்டாசு பண்டல்களை தொழிலாளர்கள் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு பட்டாசு பண்டல் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தது. இதில் ஏற்பட்ட உராய்வில் அந்த பண்டலில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த பட்டாசுகள் தீப்பிழம்புடன் கிட்டங்கியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மற்ற பட்டாசுகள் மீது விழுந்தன.
இதனால் அந்த பட்டாசு பண்டல்கள் மீதும் தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் சரமாரியாக வெடித்தன. இதனால் சுமார் 10 நிமிடங்களில் அந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசுகளும் சரமாரியாக வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் கிட்டங்கியின் மேலாளர் நந்திராஜ் (35) உடல் கருகி உயிரிழந்தார்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications