சென்னையில் ஒரு கோபிகா-கணவருடன் சேர்க்கக் கோரி உண்ணாவிரதம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில், தன்னையும், குழந்தையையும் கணவர் ஏற்று கொள்ள மறுக்கிறார் என கோபிகா என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அவரை போலவே சென்னையிலும் ஒரு இளம்பெண் கணவர் வீட்டு முன் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.
அந்த பெண்ணின் பெயர் ஹேமலதா. இவர் கணவர் சரவணன், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்க்கிறார்.
சரவணனின் வீடு நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர், சக்திவிநாயகர் கோவில் தெருவில் உள்ளது.
இருவருக்கும் இதுவரை குழந்தை பிறக்கவில்லை. ஆனால், ஹேமலதா இரண்டு முறை கர்ப்பம் தரித்துள்ளார். அந்த இரு முறையும் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
இதை காரணம் காட்டி அவரது கணவர் விவாகரத்து கேட்பதாகவும், ஹேமலதாவுக்கு குழந்தை பெற்று கொள்ள விருப்பமில்லை. அதனால் தான் இரண்டு குழந்தையும் இறந்து போனது என்றும் அவர் குற்றம்சாட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஹேமலதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சரவணன் போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார். மேலும் தற்போது தனியாக வசித்து வரும் சரவணனுக்கு இரண்டாவது திருமண ஏற்பாடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹேமலதா தனது பெற்றோருடன் நேற்று இரவு முதல் கணவர் வீட்டுக்கு முன்னதாக போராட்டம் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
எனது கணவரின் இரண்டாவது திருமணத்தை தடுக்க வேண்டும் என போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கணவரோடு சேர்த்து வைக்கும் வரை அவரது வீட்டின் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
கன்னியாகுமரிப் பெண்ணைப் போல சென்னையிலும் ஒரு பெண் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications