தேக்கடி விபத்து: படகோட்டி-உதவியாளர் கைது, படகு சவாரி ரத்து
தேக்கடி: தேக்கடியில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான படகை செலுத்திய டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.
தேக்கடி ஏரியில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதால், அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 45 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது உடல்களைத் தேடும் பணியை மீட்புப் படையினர் நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி நீரில் நீந்தி கரை சேர்ந்து தப்பிய படகு டிரைவர் சாமுவேல் என்பவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரும், படகு உதவியாளர் அனீஷ் என்பவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேக்கடி விபத்து குறித்து நீதி விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படகு சவாரி தற்காலிகமாக ரத்து:
இதற்கிடயே தேக்கடியில் படகு சவாரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய வனத்துறை, கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுத்தை இன பாதுகாப்பு ஆணைய செயலர் ராஜேஷ் கோபாலன், மாநில வனத்துறைக்கு இந்த உத்தரவை அனுப்பியுள்ளார்.
படகு பயணங்களின் போது எடுக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய கடும் விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேக்கடியில் தற்போது படகில் பயணம் செய்பவர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவ ஜாக்கெட் மட்டுமே உள்ளது. ஆனால், விபத்து நடக்கும்போது பயணிகளுக்கு இது போதாது என்பது தற்போதைய விபத்து மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, படகு விபத்தோ அல்லது வேறு விபத்துகள் நேரிட்டாலும் அதில் இருந்து பயணிகளை எவ்வாறெல்லாம் காப்பாற்ற முடியுமோ அதற்கான உபகரணங்கள், வசதிகள் குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் விரைவில் சந்தித்து பேச உள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications