தமிழ்ப் பத்திரிக்கையாளரை சிறையில் அடைத்தது சரியே - சொல்கிறார் இலங்கை தூதர்
கொழும்பு: தமிழ்ப் பத்திரிக்கையாளர் திசநாயகத்தை சிறையில் அடைத்தது சரியான செயல்தான் என்று கூறியுள்ளார் ஐரோப்பிய யூனியன் மற்றும் பெல்ஜியத்துக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்கா.
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் மனித உரிமைக் கமிட்டியிடம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அல் கொய்தா நிறுவனம் யாராவது ஒரு ஐரோப்பிய பத்திரிக்கையாளருக்கு பணம் கொடுத்தால் அதை எந்த ஐரோப்பிய நாடாவது நியாயம் என்று கூறுமா. இதை ஐரோப்பிய நாடுகள் விளக்க வேண்டும்.
20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள திசநாயகம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர். அவர்களிடமிருந்து பணம் பெற்ற தீவிரவாத ஆதரவுப் போக்குடன் செயல்பட்டு வந்தவர். ஏராளமான நாடுகளில் தீவிரவாத இயக்கமாக விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்றார் ஆரியசிங்கா.
சூறாவளியில் முகாம் கூரைகள் சேதம்- தமிழர்கள் அவதி:
இந் நிலையில் இலங்கை அரசு அமைத்துள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளாக வர்ணிக்கப்படும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வீசிய பலத்த சூறாவளி்க் காற்றால் பல முகாம் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன. இதனால் அங்கு தங்கியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட தற்காலிக குடியிருப்புகளின் மேற்கூரைகள் தற்போது சேதமடைந்து விட்டன.
இதன் காரணமாக இங்கு தங்கியுள்ள மக்கள் வெட்ட வெளியில் வசிக்கும் பேரவலத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசுத் தரப்பில் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவற்றுக்கு நலன்புரி கிராமங்கள் என அரசு பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்தவித நலனும் இல்லாத அவலம்தான் இங்கு தற்போது தலைவிரித்தாடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications