சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி - பலர் காயம்

மதுரை, திண்டுக்கல் இடையே உள்ள ஊர் சோழவந்தான். இங்குள்ள ரயில் நிலையத்தில், இன்று மாலை 6.05 மணிக்கு ஈரோடு - நெல்லை ரயில் வந்து நின்றது.
வந்து நின்று சில நிமிடங்களுக்குள் ரயில் நிலையத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. வெடித்த வேகத்தில் அங்கு ரயிலுக்காக காத்திருந்த 2 ஆண்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் ரயில் நிலையத்தின் மேற்கூரை நாலாபக்கமும் சிதறி நொறுங்கி விழுந்தது.
பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்ததால் ரயில் நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. ஈரோடு - நெல்லை ரயிலில் இருந்த பயணிகள், ரயிலிலிருந்து அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
குண்டுவெடிப்பில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் உள்பட பலர் படுகாயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்கள் மூலம் போலீஸார், மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
குண்டுவெடிப்பால் சோழவந்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ரயில்வே நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததா அல்லது கிணறு தோண்ட அல்லது குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா என்று தெரியவில்லை.
காவல்துறை தரப்பில் கூறுகையில், என்ன மாதிரியான குண்டுவெடிப்பு என்று விசாரணைக்குப் பின்னர்தான் தெரிய வரும். இருப்பினும் தீவிரவாத செயலாக இது இருக்க வாய்ப்பில்லை என்றனர்.
குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர் வந்து நின்ற நெல்லை பாசஞ்சர் ரயிலில் குண்டுகள் ஏதேனும் உள்ளதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த ரயிலை நிலையத்திலிருந்து கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
குண்டுவெடிப்பு காரணமாக மதுரை- திண்டுக்கல் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிந்து இன்று பிற்பகல் மதுரைக்குக் கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ரயில்வே போலீஸார், உள்ளூர் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ரயில்வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சோழவந்தான் விரைந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications