ரேஷன் ஊழியர்களுக்கு 20% போனஸ்
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் “சி"மற்றும் “டி" பிரிவு பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் ஆகியோருக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை சேர்த்து 20 சதவீத போனஸ் வழங்கிடவும்,
நேரடி கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தலா ரூ. 2,000 கருணைத்தொகை, 2008-2009ம் ஆண்டில் 30 நாட்களுக்குக் குறையாமல் பணியாற்றிய தற்செயல் பணியாளர்களுக்கும், திறந்த வெளி சேமிப்பு மையங்கள் மற்றும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் ஆகிய வற்றில் பணிபுரியும் பருவ கால சுமை தூக்கும் பணியாளர்களுக்குத் தலா ரூ. 1,500 கருணைத்தொகை என 2008-2009ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகப் பணியாளர்கள் 32,174 பேருக்கு மொத்தம் ரூ. 12.59 கோடி இந்த ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications