போலி என்கவுண்டர்- குஜராத், மத்திய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: குஜராத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இஷ்ரத் ஜெஹானின் தாயார் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி மத்திய அரசு, குஜராத் அரசு மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது திட்டமிட்ட படுகொலை. அது போலி என்கவுண்டர், வேண்டும் என்றே அவர்களைக் கொலை செய்துள்ளனர் என்று குஜராத் மாநில நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த குஜராத் அரசு, இந்த நீதி விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரியது. அதை ஏற்று குஜராத் உயர்நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை நீக்கக் கோரி இஷ்ரத்தின் தாயார் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இதை விசாரித்த நீதிபதிகள் பி.என். அகர்வால், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி இஷ்ரத்தின் தாயார் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில் குஜராத் அரசின் கோரிக்கையை ஏற்று இடைக்காலத் தடை விதித்தது சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் நகருக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜஹான், ஜாவேத் குலாம் ஷேக் என்கிற பிரனேஷ் குமார் பிள்ளை, அம்ஜத் அலி என்கிற ராஜ்குமார், அக்பர் அலி ரானா, ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோர் போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications