மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னையின் பிரபலமான லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது சக மாணவர்கள் 8 பேருடன் கிராமத்து பம்பு செட்டில் குளித்த காட்சியை செல்போனில் படம் பிடித்த அவர்களது வகுப்புத் தோழர்கள் 9 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
லயோலா கல்லூரியைச் சேர்ந்த விஷூவல் கம்யூனிகேஷன் மாணவ, மாணவியர் சிலர் கல்வி சுற்றுலாவாக காஞ்சிபுரம் மாவட்டம் செஞ்சிவாக்கம் கிராமத்திற்குச் சென்றிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பம்பு செட்டைப் பார்த்த சில மாணவர்கள் குளிக்க ஆசைப்பட்டு குளிக்கச் சென்றனர். அவர்களுடன் ஒரு மாணவியும் குளித்துள்ளார். இந்த 9 பேரும் குளித்ததை சக மாணவர்கள் தங்களிடமிருந்த செல்போன் கேமராக்கள் மூலம் படமாக்கியுள்ளனர்.
இது பின்னர் கல்லூரிக்குள் பரவியுள்ளது. இது கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரியவரவே அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம், குளிப்பதை படம் பிடித்த ஒரு மாணவி உள்பட 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை கூறுகையில், இதுகுறித்து ஆசிரியர்களுக்கு முதலில் தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் வைத்திருந்த செல்போன்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை முடிவடைந்ததும், அவர்களது பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். விசாரணை தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமான நடவடிக்கைதான் இது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications