ஏர்வாடி தர்கா எப்போது சுற்றுலாத் தலமாகும்?
ஏர்வாடி: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவை சுற்றுலாத் தலமாக மாற்றப் போவதாக அரசு அறிவித்தும், இதுவரை அதுதொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஊர் ஏர்வாடி. இங்குள்ள தர்கா மிகவும் பிரபலமானது. ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு தினசரி வந்து செல்கின்றனர்.
இதையடுத்து ஏர்வாடியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக அறிவிப்பும் வெளியானது.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகியும் கிணற்றில் போட்ட கல்லாகவே இது இருக்கிறது. இதுவரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை.
ஆண்டுதோறும் ஏர்வாடியில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும். அனைத்து மதங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கூடும் இவ்விழா ஒரு மாதம் வரை நடக்கும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும் தற்போது பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தர்கா நிர்வாகத்தால் பெருமளவில் செலவு செய்ய முடியாத நிலை.
சுகாதாரப் பணிகளுக்கு மட்டும் உள்ளூர் ஊராட்சி நிர்வாகம் பாதி செலவை ஏற்றுக் கொள்கிறதாம்.
இதை சுற்றுலாத் தலமாக அறிவித்தால் சுற்றுலாத்துறையின் முழு உதவிகளும் கிடைக்கும், பக்தர்கலுக்கு பல்வேறு கூடுதல் வசதிகள் கிடைக்கும், தர்கா நிர்வாகம் மற்றும் ஊராட்சிக்கும் வருவாய் அதிகரிக்கும். இப்படிப் பல பயன்கள் உள்ளன.
ஆனால் தற்போது பெரிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமலேயே இருந்து வருகிறது ஏர்வாடி தர்கா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications