கழிவு நீர் மாசு - திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ. 55 கோடி அபராதம்

சாயக் கழிவு நீரால் மாசுபட்டுப் போன நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் வகையில் சாயப்பட்டறைகளை மூட உத்தரவிடக் கோரி நொய்யல் ஆறு ஆயக்கட்டுதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நொய்யல் ஆற்றை தூர் வாரவும், தூய்மைப்படுத்தவும் திருப்பூர் சாயப்பட்டறை அதிபர்கள் ரூ. 55 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
இதை எதிர்த்து சாயப்பட்டறை அதிபர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீலை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ். செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு...
இயற்கையை மாசுபடுத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். நாட்டின் சுற்றுச்சூழல் சட்டங்களை நிலை நிறுத்த வேண்டியது அவசியம்.
திருப்பூர் தொழில் சூழல், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கிறது. நாட்டுக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. அதேசமயம், ஒரு ஆற்றையே சாயப்பட்டறை நிறுவனங்கள் மாசுபடுத்தியுள்ளது ஏற்க முடியாது. அதற்கான விலையை அந்த நிறுவனத்தினர் தந்தாக வேண்டும்.
சாயப்பட்டறை நிறுவனங்களின் செயலால் ஏராளமான விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களால் பயிரிடவே முடியாத அளவுக்கு நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த அபராதத் தொகையை 3 மாதங்களுக்குள் திருப்பூர் சாயப்பட்டறை அதிபர்கள் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications