ஈஎஸ்பின் பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்த செரீனா
மெல்போர்ன்: உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், இஎஸ்பிஎன் விளையாட்டு சஞ்சிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்க ஓபன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் லைன் நடுவரைப் பார்த்து கோபமாக திட்டியதும் தற்போது அவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காகவும் அவர் இரு கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
அமெரிக்க ஓபன் சர்ச்சை தொடர்பாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இஎஸ்பிஎன் இதழின் அட்டைப் படத்தில் முழு நிர்வாணத்துடன் செரீனா கொடுத்துள்ள போஸ் இடம் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டுக்காகவும் செரீனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகி விட்டது. நன்னடத்தை விதிகளின்படி 2 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் செரீனா பங்கேற்க தடை விதிக்கப்படும்.
அவ்வாறு தடை விதிக்கப்பட்டால், கடந்த 15 ஆண்டுகளில் நன்னடத்தை விதி மீறலால் தடை விதிக்கப்படும் முதல் வீராங்கனையாக செரீனா உருவெடுப்பார். இதற்கு முன்பு அமெரிக்காவின் ஜெப் தரங்கோ நன்னடத்தை விதி மீறல் காரணமாக தடை விதிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக யாரும் இதுபோல தடை விதிக்கப்பட்டதில்லை.
1995ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியின்போது நடுவர் மீது அதிருப்தி அடைந்த தரங்கோ, களத்தை விட்டு கோபத்துடன் வெளியேறினார். மேலும், பிரெஞ்சு நடுவர் ப்ரூனோ ஒரு ஊழல் பேர்வழி என்றும் குற்றம் சாட்டினார். இதையடுத்து அடுத்த ஆண்டு நடந்த விம்பிள்டன் உள்ளிட்ட இரண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
அதேபோன்ற தடை தற்போது செரீனாவுக்கும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications