தினமலர் செய்தி ஆசிரியர் கைது - கரூர் பிரஸ் கில்டு கண்டனம்
கரூர்: தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியரை அலுவலகத்திற்குள் புகுந்து கைது செய்த போலீசாருக்கு கரூர் பிரஸ் கில்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் பிரஸ் கில்டு கூட்டம் அதன் தலைவர் சிவராமன் தலைமையில், செயலாளர் கே.என்.வடிவேல் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தினமலர் செய்தி ஆசிரியரை கைது செய்ய குறுக்கு வழியில் சென்று தமிழக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது.
ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சில நடிகைகளின் தயவு தேவை என்பதாலும், சில நடிகர்கள் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதாலும், அவர்களை திருப்திப்படுத்தவும், தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு உதவுவார்கள் என்ற நல்ல நோக்கத்திலும் யாரோ ஒரு சிலர் கொடுத்த மறைமுக பிரஷரால் போலீசார் செயல்பட்டுள்ளனர் என்பது இந்த கைது மூலம் தெள்ள தெளிவாகின்றது.
தமிழக போலீசார் கடந்த சில காலமாக போலீசாரின் மாண்புகளை குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்ற பரவலான குற்றச்சாட்டை உண்மையாக்கும் விதமாக செயல்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் மூலம் ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை திசை திருப்ப போலீசார் செயல்பட்டிருப்பார்களோ என்று எண்ணவும் தோன்றுகின்றது என்ற வாத்தை மறுப்பதற்கு இல்லை.
எனவே, தினமலர் செய்தி ஆசியரை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர் மீது போலீசார் போட்ட வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் இந்திய குடியரசு தலைவர் உடனே தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் இரத்தினம் , சிம்மம் ரவி, தங்கவேல், செல்வராஜ், பரகத், ஆனந்த் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications