நடிகர்கள் மீது நடவடிக்கை எப்போது? - கமிஷனர் விளக்கம்
சென்னை: பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசிய நடிகர்கள், நடிகை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் அவதூறு செய்தி வெளியிட்டதாக தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த செய்தி வெளியிட்டது தொடர்பாக நடிகர் சங்கத்தில் கண்டனக் கூட்டம் ஒன்று நடந்தது.
அப்போது பேசிய நடிகர்கள், நடிகைகள் படு ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 8ம் தேதி சென்னையில் குழுமிய பத்திரிக்கையாளர்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மற்றும் ஆதார வீடியோவையும் கொடுத்தனர்.
இதன் மீதான முன்னேற்ற நடவடிக்கை குறித்து ஆணையரிடம் கேட்டபோது,
புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications