தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை-சிபிஐ கோரிக்கை
நாகப்பட்டிணம்: தமிழகத்தில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருப்பது நியாயமானதல்ல.
இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, எவ்வித குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் என சட்டம் உள்ளது. எனவே, இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க எந்தத் தடையும் இல்லை.
அதே நேரத்தில் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை மட்டும் வழங்கினால், அவர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற முடியாத நிலை ஏற்படும். எனவே, இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சே கூட இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்தான்.
இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க சட்டம் உள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவது தடுக்கப்படவில்லை எனில் மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும் என்றார் பாண்டியன்.
-
Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! என்னென்ன கேள்விகள்? -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications