இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு பிரித்து சிதைத்துள்ளனர் - திருமா.
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும், புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும்.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எங்களிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதி முகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் மூலமாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்கை ஒன்றையும் நான் சமர்ப்பிப்பேன் என்றார் திருமாவளவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபயாவுடன் திமுக கூட்டணி குழு சந்திப்பு:
இந்த நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவையும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
போருக்குப் பிந்தைய நிலைமை, மறு குடியமர்த்தல் உள்ளிட்டவை குறித்து இரு தரப்பும் பேசினவாம்.
இந்த சந்திப்பின்போது இந்திய தூதர், துணைத் தூதர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications