தூத்துக்குடியில் ஒரு 'அத்திப்பட்டி': கிராமத்தை காணவில்லை-கலெக்டரிடம் மனு!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பொதுமக்கள் சுமார் 100 பேர் திரண்டு ஒரு கிராமத்தை காணவில்லை என மாவட்ட கலெக்டரிடம் 'சிட்டிசன்' பட பாணியில் புகார் கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி என்ற கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் பால் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பொன் கருப்பசாமியின் தலைமையில் திரண்டு மாவட்ட கலெக்டர் பொறுப்பு வகித்து வரும் துரை. ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சங்கரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட புலிப்பாஞ்சன் கிராமத்தில் வறட்சி காரணமாக விவசாயத் தொழில் முடங்கி விட்டது.
இதனால் இந்த கிராமத்தில் வசித்தவர்கள் வெளியேறி அருகில் உள்ள தாளமுத்துநகர், முத்தம்மாள் காலனி போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த கிராமமே காலியாகி, மாவட்ட வரைபடத்தில் மட்டுமே உள்ளது.
இதையடுத்து, 247.10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராம நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்துள்ளனர். அதேபோல் 137.36 ஏக்கர் கொண்ட புலிப்பாஞ்சன் குளத்தையும், 102.11 ஏக்கர் கொண்ட நித்யகல்யாணி குளத்தையும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கியுள்ளனர்.
இந்த இரண்டு குளங்களும் காணாமல் போனதால் கால்நடைகளுக்கு நீரும், தீவனமும் இல்லாமல் நாங்கள் வாடி வருகிறோம்.
புலிப்பாஞ்சன் கிராமம், புலிப்பாஞ்சன் குளம், நித்யகல்யாணி குளம் ஆகியவற்றைக் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்.
போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தூத்துக்குடி- எட்டையபுரம் சாலையில் சங்கரப்பேரி கிராம மக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications