மெளன்ட் ரோட்டில் 'மின்னலா'? ரூ. 1500 அபராதம்!
சென்னை: சென்னை அண்ணா சாலையில், படு வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றால் இனி ரூ. 1500 அபராதம் கட்ட வேண்டும்.
மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது சென்னையில் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள் முதல் ஆட்டோ, கார் என அனைத்து வாகனங்களுமே ராக்கெட் வேகத்தில்தான் சீறிப் பாய்கின்றன.
குறிப்பாக ஆட்டோக்கார புண்ணியாத்மாக்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அதேபோல பள்ளிக்கூட வேன்களும் கூட இப்போதெல்லாம் மகா மோசமான வேகத்தில்தான் செல்கின்றன. கேட்டால், பள்ளிக் கூடத்திற்கு நேரமாகி விடும் என்று காரணம் கூறுகிறார்கள். மீறிக் கேட்டால், பள்ளிக் கூட பிள்ளைகள் இருக்கும் வண்டியை மறித்து பிரச்சினை செய்கிறாயா என்று கேட்டு சண்டைக்கு வந்து விடுகிறார்கள்.
பெரும்பாலும் இவர்களை போக்குவரத்துப் போலீஸார் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இவங்க எப்பவுமே இப்படித்தான் என்பது போல கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.
இதனால் விபத்துக்கள் அதிகரித்து விட்டன. இதையடுத்து தற்போது அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு கடிவாளம் போட களம் இறங்கியுள்ளது காவல்துறை.
போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக அண்ணாசாலையில் வருகிற 19-ந்தேதி முதல் போக்கு வரத்து விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
அண்ணாசாலையில் பெரியார் சிலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரை உள்ள பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அண்ணாசாலையில் உள்ள சிக்னல்களில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுகிறார்கள்.
காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ஷகில்அக்தர் போக்குவரத்தை சீர்படுத்துவற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துவதற்குள் பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும் அதி வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வோரிடம் ரூ. 1500 அபராதமும் வசூலிக்கப்படவுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications