Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலைக்காரி வேடம்.. செக்ஸ் வலை.. 20 வீடுகள்.. 500 பவுன் கொள்ளை.. பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வேலைக்காரி வேடத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் 500 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார்.

வீட்டு உரிமையாளர்களை செக்ஸ் வலையில் விழ வைத்தும், டீ, காபியில் மயக்க மருந்து கொடுத்து மயக்கியும் இந்தப் பெண் பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளார்.

ரேணுகாதேவி (30) என்ற இந்தப் பெண்ணுக்கு ரேவதி, உமா என்ற பல பெயர்கள் உண்டு. மாயவரத்தைச் சேர்ந்த இவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னைக்கு வந்தவர்.

கடந்த 2005ம்ம் ஆண்டில் இருந்து சென்னை நகரில் 25 வீடுகளில் வேலைக்காரியாக பணிக்குச் சேர்ந்து நகைகளை சுருட்டியுள்ளார்.

எந்த வீடாக இருந்தாலும் சில நாட்கள் மட்டுமே வேலை பார்த்துள்ள ரேணுகாதேவி வீட்டில் உள்ள ஆண்களை செக்ஸ் வலையில் விழ வைத்து தனது காரியத்தை சாதித்துள்ளார்.

வீட்டில் உள்ள பெண்களுக்கு டீ, காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கி நகைகளை சுருட்டியுள்ளார்.

அம்பத்தூரில் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த இவர் அந்தப் பெண் பணிக்குச் சென்ற பின் அவரது கணவரை செக்ஸ் வலையில் வீழ்த்தியுள்ளார்.

செக்ஸ் வைத்தவாரே, மது அருந்தலாம் என்று கூறி அவருக்கு அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு 75 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டார் ரேணுகா தேவி.

திருமங்கலம், அசோக்நகரில் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து அந்த வீட்டின் பெண்களுக்கு காபி, டீயில் மருந்து கொடுத்து 125 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

மொத்தத்தில் சுமார் 20 வீடுகளில் 500 பவுன் நகைகளை இவர் திருடியுள்ளார். இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்ட பலரும் செக்ஸ் அனுபவித்த காரணத்தால், சிக்கல் வரும் என அஞ்சி இவர் மீது போலீசில் புகாரே தரவில்லை என்றும் தெரிகிறது.

ஆனால், மயக்க மருந்து கலந்த தரப்பட்டதால் பாதிக்கப்பட்ட பல வீட்டினரும் புகார்களை தந்து வந்தனர். சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களிலும் பதிவான இந்த வழக்குகளையடுத்து இந்தப் பெண்ணைப் பிடிக்க கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்தப் பெண்ணின் படமும் ஒரு வழியாக சேகரிக்கப்பட்டது.

இந் நிலையில் அமைந்தகரையில் ஒரு வீட்டில் பணி்க்குச் சேர்ந்த இந்தப் பெண் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது அவரது படம் அங்கிருந்த குளோஸ் சர்க்யூட் கேமராவில் பதிவானது. இதை வைத்து ரேணுகாதேவியை மடக்க திட்டமிடப்பட்டது.

ஜெ.ஜெ. நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக அலைந்து திரிந்து இந்தப் பெண்ணை திருச்சியில் வைத்து கைது செய்தனர்.

அப்போது 9 வீடுகளில் மட்டுமே திருடிய குற்றத்தை ரேணுகாதேவி ஒப்புக்கொண்டாள். அவரிடமிருந்து 100 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன

இவரது திருட்டு நகைகளை விற்க உதவி வந்த சுப்பிரமணி ( 47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

ரேணுகாதேவிக்கு 4 முறை திருமணமானதும் தெரியவந்துள்ளது. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+